தூத்துக்குடி மாவட்ட மாவட்ட சதுரங்க போட்டி


தூத்துக்குடி மாவட்ட மாவட்ட சதுரங்க போட்டி
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட மாவட்ட சதுரங்க போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில், மாவட்டத்தில் சதுரங்க வீரர், வீராங்கணைகளை ஊக்குவிக்கும் வகையில் நாளைமறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காமராஜ் கல்லூரியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடக்கிறது. இந்த போட்டிகள் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு, 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு, 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு மற்றும் பொதுபிரிவு என 4 பிரிவுகளாக நடக்கிறது. போட்டியில் பங்குபெற விரும்புவோர் வருகிற 13-ந் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தாமதமாக வருபவர்கள் இரண்டாம் சுற்றில் இருந்து மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்கு 10 பரிசுகளும், மாணவிகளுக்கு 10 பரிசுகளும் என முதல் மூன்று பிரிவுக்கும் 60 பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. பொதுப்பிரிவினருக்கு 10 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

ஆகையால் போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் அதற்கான நுழைவு கட்டணத்தை www.easypaychess.com மற்றும் www.signinchess.comஆகிய இணையதளங்களில் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பங்குபெறும் அனைவரும் பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது ஆதார் அட்டைநகல் மற்றும் போட்டோவுடன் ரூ.75 செலுத்தி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுவீரர் எண் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98658 30030, 89257 88874, 96983 95983, 98945 42121 ஆகிய எண்களில் சதுரங்க கழக நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story