தூத்துக்குடி: நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல் அமைச்சர் அறிவிப்பு
நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவிஅறிவித்துள்ளார்.
சென்னை,
தூத்துக்குடி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் நிதியுதவிஅறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,
தூத்துக்குடி மாவட்டம் சிவலார்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பரின் மகன்கள் மகேஸ்வரன், அருண்குமார் மற்றும் கார்த்திகேயன் மகன் சுதன் ஆகியோர் கடந்த 12ம் தேதி அன்று மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
Related Tags :
Next Story