தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆணையம் தற்போது இறுதி அறிக்கையை அரசுக்கு வழங்கி விட்டதாகவும், அதில் உள்ள பரிந்துரைகள் சிலவும் செய்திகளாக வெளியாகியுள்ளன.

குறிப்பாக, சம்பவ நேரத்தில் காவல்துறை தென் மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றியவர் உட்பட 17 காவல்துறையினர் தான் துப்பாக்கி சூட்டிற்கு காரணம் என தெரிவித்திருப்பதும், மாவட்ட கலெக்டரின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற செயலும் தான் துப்பாக்கி சூட்டிற்கு முக்கிய காரணங்கள் என ஆணையம் மதிப்பிட்டிருக்கிறது.

எனவே ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை மக்கள் மன்றத்தில் முன்வைத்து பொது விவாதம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story