தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் பணி இடைநீக்கம்
தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் அசோகன். இவர் கடந்த 4 மாதங்களாக தூத்துக்குடியில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளில் அவரை பணி இடைநீக்கம் செய்து சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா உத்தரவிட்டார். இவர் சேலத்தில் பணியாற்றிய போது, வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
Related Tags :
Next Story