செஸ்ஒலிம்பியாட் போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவன் தேர்வு


செஸ்ஒலிம்பியாட் போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவன் தேர்வு
x

செஸ்ஒலிம்பியாட் போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவன் தேர்வு செய்யப்பட்டுளளார்.

தூத்துக்குடி

சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள 44-வது ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சார்ந்த 2 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். அதில் டி.எம். என். எஸ்.டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ராஜ ரத்தினவேல் தர வரிசை பட்டியலில் 345-ஆவது போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மாணவன் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர். கே.காளிதாசன், பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர், பொருளாளர் செல்வராஜ், சங்க செயலாளர் ராஜகுமார், துணை தலைவர் அனிதா சிவானந்தம், துணை செயலாளர் ராமநாதன், பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், அன்புலிங்கம், ஜனகர், ரமேஷ், பிரம்மசக்தி, ராகவன், லிங்க செல்வன், ஜெயகணேஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story