தூத்துக்குடி: கடனை திரும்ப கேட்ட தொழிலாளி குத்திக்கொலை - வாலிபர் வெறிச்செயல்...!


தூத்துக்குடி: கடனை திரும்ப கேட்ட தொழிலாளி குத்திக்கொலை - வாலிபர் வெறிச்செயல்...!
x

கோவில்பட்டி அருகே கொடுத்த கடனை திரும்ப கேட்ட தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார்.

கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த முத்துராஜ் (வயது 39). என்பவர் கட்டிட தொழிலாளி பாலமுருகனிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்று உள்ளார்.

தொழிலாளி பாலமுருகன் நேற்று முன்தினம் தான் கடனாக கொடுத்த ரூ.10 ஆயிரம் உடனடியாக திருப்பி தர வேண்டும் என்று முத்துராஜிடம் கேட்டுள்ளார். தற்பொழுது தன்னிடம் பணம் இல்லை, சில தினங்களில் கொடுத்து விடுவதாக அவர் கூறியுள்ளார். பாலமுருகன் பணத்தை உடனே தர வேண்டும் என்று கூறி அவதூறாக பேசியுள்ளார்.

இந்த நிலையில் தொழிலாளி பாலமுருகன் நேற்று இரவு முத்துராஜை போனில் தொடர்பு கொண்டு தகாத வார்தையால் திட்டி, ஆம்பிளையா இருந்தா நேரில் வாடா என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், கத்தியுடன் வந்து சிந்தாமணி நகரில் நின்று கொண்டிருந்த தொழிலாளி பாலமுருகனை குத்தி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி போலீசார் விரைந்து சென்று பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முத்துராஜை தேடி வருகின்றனர்.


Next Story