ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.71 ஆயிரம் அபராதம்
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.71 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகுமார், மகேஸ்வரன், ஆகியோர் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பலரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு கோர்ட்டு மூலம் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நெல்லையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையின் 31 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை நெல்லை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ரூ.71 ஆயிரத்து 400 அபராத தொகை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story