கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் உதவி மையத்தை அணுகி ஆலோசனை பெறலாம்-கலெக்டர்


கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் உதவி மையத்தை அணுகி ஆலோசனை பெறலாம்-கலெக்டர்
x

கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் உதவி மையத்தை அணுகி ஆலோசனை பெறலாம் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் உதவி மையத்தை அணுகி ஆலோசனை பெறலாம் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட உதவி மையத்தை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரால் கடந்த 15-ந் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்காக உரிய ஆலோசனைகள் வழங்கிட அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலரின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் அதனை உடனடியாக இணைத்திடுங்கள். அதனால் கூட உரிமைத் தொகை கிடைக்கப் பெறாமல் உள்ளது. ஒரு சிலருக்கு தொடர் வங்கி விடுமுறையின் காரணமாக பரிவர்த்தனைகள் நடக்காமல் உள்ளது.

ஆலோசனை பெறலாம்

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி பெறப்பட்டவர்கள் அனைவருக்குமே விரைவில் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்படும். குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்று உரிமைத் தொகை வங்கியில் கிடைக்கப்பெறாதவர்கள், குறுஞ்செய்தி ஏதும் கிடைக்கப் பெறாதவர்கள் அனைவரும் இந்த உதவி மையத்தினை அணுகி உரிய ஆலோசனைகளை பெறலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மேல் முறையீடு செய்தால் கண்டிப்பாக தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்து தகுதியான மகளிர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாசில்தார் வெங்கடேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story