தி.மு.க.கவுன்சிலரை தாக்கியவர்கள் கைது
தி.மு.க.கவுன்சிலரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூர்
தி.மு.க.கவுன்சிலரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூரை அடுத்த துத்திபட்டு ஊராட்சியில் மழை நீர் வடி கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் நெடுஞ்சாலையை ஒட்டி சாந்தராஜ் என்பவர் தனது அலுவலகம் ஒன்றை கட்டி பயன்படுத்தி வந்தார். மழைநீர் வடிகால் அமைக்கும் வழித்தடத்தில் இந்த கட்டிடம் இருந்ததால் அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி நடந்தது.
இது தொடர்பாக சாந்தராஜுக்கும் அதே பகுதியில் அன்னை சத்யா நகரில் வசித்து வரும் 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான குமரேசன் (வயது 46) என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் குமரேசன் பேரணாம்பட்டு சாலையில் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த சாந்தராஜின் மகன்கள் மற்றும் உறவினர்கள் சிலர் குமரேசனை கட்டையால் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்த காயத்துடன் மீட்கபட்ட குமரேசன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதே போல் சாந்தராஜ் தரப்பில் வினோத், விமல் ஆகியோர் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து குமரேசன் அளித்த புகாரின் பேரில்.உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து சாந்த ராஜின் மகன்களான முத்தமிழ் (21), அஜய் (24) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.