"அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போடுவோர் ஒடுங்குவர்" - தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு


அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போடுவோர் ஒடுங்குவர் - தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு
x

கோப்புப்படம்

மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தூத்துக்குடி மக்களின் குரலாய் பேசியதற்கு தனிப்பட்ட முறையில் தன்னை காயப்படுத்துகின்றனர் என்று புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து மக்களின் குரலாய் பேசியதற்கு...

திண்டாடும் மாடலை வைத்து....

திண்டாடிக் கொண்டிருப்பவர்கள், என்னை சமூக வலைதளங்களில் குத்திக்கிழித்து தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

அவர்களின் மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது...சரியப்போகிறது...

இது சபதம்!

அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போட்டவர்கள்...

ஆடி ஒடுங்கியிருக்கும் சரித்திரத்தை நான் இங்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்...

(தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் அங்கு பார்ப்பேன்....எவ்வளவு வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களில் காயப்படுத்துங்கள்....

சமூகத்திலும் காயப்படுத்துங்கள்.....

அந்த ரத்தத்தில் தோய்த்து....

நீங்கள் சரியும் சரித்திரத்தை எழுத நான் தயார்.....

இது அப்பழுக்கற்ற பொது வாழ்வில் வாழும் ஒரு பெண்ணின் சபதம்!

இவ்வாறு அதில் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.


1 More update

Next Story