வைப்பீடு செய்து ரசீது பெற்றவர்கள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வைப்பீடு செய்து ரசீது பெற்றவர்கள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 23 Jun 2023 8:10 AM GMT)

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் வைப்பீடு செய்து ரசீது பெற்றவர்கள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

கடலூர்

கடலூர் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1996 முதல் 2001 -ம் ஆண்டு வரை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகத்தில் குழந்தைகளின் பெயரில் ரூ.1500 வைப்பீடு செய்யப்பட்டு வைப்புத் தொகை ரசீதுகள் பெற்ற பயனாளிகள் வைப்பீட்டு தொகைக்கான முதிர்வுத்தொகை பெறுவதற்கு இறுதி வாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் வைப்பீடு செய்யப்பட்டு வைப்புத்தொகை ரசீதுகள் பெற்ற பயனாளிகள் முதிர்வுத்தொகை பெறுவதற்கு பெண் குழந்தையின் வைப்புத்தொகை ரசீது (அசல்), 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் புகைப்படம் -1 ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அப்படி சமர்ப்பிக்கும் பயனாளிகளுக்கு வைப்புத்தொகை ரசீதுகள் முதிர்வுத் தொகையானது தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகத்தில் இருந்து பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story