மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவையாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். அதன்படி நடப்பாண்டில் வருகிற 15.08.2023 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் தமிழக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிபவர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மருத்துவர், அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்தினர், சமூக பணியாளர்கள், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தங்கப்பதக்கம், பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகளை பெற விருப்பமுள்ள தகுதியான நபர்கள் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பத்தினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.