தமிழ் மண்ணை தாக்க நினைப்பவர்கள் அடுத்த தேர்தலில் வீழ்வது உறுதி - அண்ணாமலை பேச்சு


தமிழ் மண்ணை தாக்க நினைப்பவர்கள் அடுத்த தேர்தலில் வீழ்வது உறுதி - அண்ணாமலை பேச்சு
x

தமிழ் மண்ணை தாக்க நினைப்பவர்கள் அடுத்த தேர்தலில் வீழ்வது உறுதி என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

திமுக அரசு, தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

திமுக அரசை கண்டித்து கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

திமுக தமிழை வளர்க்கவில்லை, தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 48,000 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். மொழியை வைத்து திமுக அரசியல் செய்கிறது. வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.

தமிழ் மண்ணை தாக்க நினைப்பவர்கள் அடுத்த தேர்தலில் வீழ்வது உறுதி.பட்டியல் இன மக்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய முடியாது என விரைவில் தெரியவரும். கடலூரில் பாஜக வேகமாக வளர வேண்டும் என்றே இந்த போராட்டத்தில் கடலூரில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

ஏழைத்தாய்மார்களுக்கு நேர்மையான ஆட்சி வேண்டும். திமுக பித்தலாட்ட கட்சி என்பதை நிரூபிக்க வேண்டாம்.பெரியார் எழுதிய புத்தகத்தில் 21-ம் பக்கத்தை அளித்தாலே போதும் என்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று பாரதிய ஜனதா கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசும்போது " தமிழகத்தில் தமிழ், தமிழ் என்று ஆட்சியாளர்கள் ஏமாற்றியது போதும். இனி வரும் காலங்களில் நமது குழந்தைகள் மற்றும் சந்ததியினர் எத்தனை மொழி படிக்க வேண்டுமோ அத்தனை மொழிகளையும் படித்து வாழ்க்கையில் முன்னேற நாம் வழி வகுக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் மட்டுமே படிக்கும் பல மொழிகளை செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் வரை படிக்க வேண்டும். அதேபோன்று கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் படிக்கும் படிப்பை ஏழை மாணவ மாணவிகளும் படித்து வாழ்க்கையில் கோலோச்ச வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.


Next Story