அரசு பஸ் கண்டக்டருக்கு மிரட்டல்:வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரசு பஸ் கண்டக்டருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ராகுல் வளவன் (வயது 22). இவர் கடந்த 19.3.23 அன்று பரமன்குறிச்சி பஜார் பகுதியில் குடிபோதையில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து, பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல் வளவனை கைது செய்தனர். தொடர்ந்து இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ராகுல் வளவனை கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.
Related Tags :
Next Story