தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு அண்ணாமலை கடிதம்


தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு அண்ணாமலை கடிதம்
x
தினத்தந்தி 25 Sept 2022 10:30 AM IST (Updated: 25 Sept 2022 10:51 AM IST)
t-max-icont-min-icon

உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

கோவை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பாஜக அலுவலகம், நிர்வாகிகள் வீடு, கார், கடைகளுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிறது

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை தாக்குதல்கள் தொடர்பாகவும், தமிழகத்தில் தேச பாதுகாப்பு அச்சறுத்தல்கள் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

வகுப்புவாத சக்திகளுக்கு துணை போகும் தமிழக அரசின் தவறான நிலைப்பாடுகளை எல்லாம் ஆதாரங்களுடன் ஆவண விளக்கங்களுடன் சுட்டிக்காட்டி அமித் ஷாவுக்கு அனுப்பி உள்ளதாக அண்ணாமலை கூறி உள்ளார்.


Next Story