கோவில் நிர்வாகிக்கு மிரட்டல்; முதியவர் கைது

கோவில் நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து நாகராஜன் (வயது 38). இவர் அதே பகுதியில் காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகியாக உள்ளார். கோவிலுக்கு பின்புறம் மிக்கேல் (75) என்பவருடைய வீடு உள்ளது. கோவில் இடத்தில் செட் அமைப்பது சம்பந்தமாக மிக்கேலுக்கும், முத்து நாகராஜனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கோவிலுக்கு பின்புறம் செட் அமைத்தது சம்பந்தமாக முத்து நாகராஜன் கேட்டதற்கு மிக்கேல் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துநாகராஜன் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மிக்கேலை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






