பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்
கெலமங்கலம் அருகே லாரிகளுக்கு டீசல் அடித்த பணத்தை கேட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை
கெலமங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாத். இவருடைய மனைவி ரூபா. கெலமங்கலத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். கணேசா காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது டிப்பர் லாரிகளுக்கு பெட்ரோல் பங்க்கில் கடனுக்கு டீசல் நிரப்பி வந்தார். அதற்கான தொகை ரூ.50 லட்சம் சீனிவாசன் கொடுக்காமல் பாக்கி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை ரூபா கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சீனிவாசன் மற்றும் அவரது மகன் சுரேஷ் உள்ளிட்டவர்கள் ரூபாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக அவர் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சீனிவாசன், அவரது மனைவி அலமேலு, மகன் சுரேஷ், போடிச்சிப்பள்ளி பாலா, கொண்டன் ஆகியோர் மீது கெலமங்கலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story