தர்மபுரியில் கத்தியை காட்டி மிரட்டி லாரி டிரைவரிடம் பணம் பறித்த
தர்மபுரியில் கத்தியை காட்டி மிரட்டி லாரி டிரைவரிடம் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
லாரி டிரைவர்
தர்மபுரி அருகே உள்ள பழைய தர்மபுரி பகுதியைச் சேர்ந்தவர் இன்பரசன் (வயது 31) லாரி டிரைவர். இவர் ஓசூரில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்றார். தர்மபுரியில் உள்ள பென்னாகரம் மேம்பாலம் அருகே சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க கடைக்கு சென்றார்.
அப்போது அவரை 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் வைத்திருந்த ரூ.1500- ஐ பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதுகுறித்து இன்பரசன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
2 பேர் கைது
அப்போது தர்மபுரி கொட்டாய் மேடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (27), கோகுல கிருஷ்ணன் (23) ஆகியோர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக 2 பேரையும் டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.