கத்தியை காட்டி மிரட்டி வாலிபர்களிடம் பணம் பறிப்பு; 4 பேர் கைது
பெரியகுளத்தில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபர்களிடம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் மாரிச்செல்வம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் சடையாண்டி. இவர்கள் இருவரும் பெரியகுளம் பஸ் நிலையத்தில் ஊருக்கு செல்வதற்கு பஸ் ஏறுவதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதற்கிடையே அந்த வழியாக வந்த பெரியகுளம் போலீசார் துரிதமாக செயல்பட்டு விரட்டி சென்று அவர்கள் 4 பேரையும் பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அவர்கள், பெரியகுளம் வடகரையை சேர்ந்த பஷீர் அகமது (வயது 24), அவரது நண்பர்களான சூர்யா (23), ஜோசப் கார்த்தி (24), மரியபால் தினகரன் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story