முப்பெரும் விழா


முப்பெரும் விழா
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முப்பெரும் விழா நடைபெற்றது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே குன்றக்குடியில் சந்திரயான்-3 வெற்றிக்கு பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா, தேசிய விருது பெற்ற குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்திற்கு பாராட்டு விழா, குன்றக்குடி ஆதீனம் கல்வியியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் கல்வியியல் கல்லூரி முதல்வர் செலின்அமுதா வரவேற்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சந்திரயான்-3 வெற்றிக்கு அயராது பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளின் சிறப்பு குறித்தும், தேசிய விருது பெற்ற அறிவியல் வேளாண் மையத்தின் இயக்குனர் மற்றும் அலுவலர்களின் உழைப்பு குறித்தும் பேசினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குன்றக்குடி அறிவியல் வேளாண் நிலைய தலைவர் செந்தூர்குமரன், மக்கள் கல்வி நிலைய தலைவர் நாச்சிமுத்து, கல்வியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் ராமநாதன், பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், குன்றக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அலுமேலு உள்பட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story