ராயக்கோட்டையில்தே.மு.தி.க. முப்பெரும் விழா
ராயக்கோட்டை
கிருஷ்ணகிரி மேற்கு, கிழக்கு மாவட்டம், ஓசூர் மாநகர மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி 19-வது ஆண்டு தொடக்க விழா, விஜயகாந்த் பிறந்தநாள் விழா, நல உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் ராயக்கோட்டை பஸ் நிலையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் எஸ்.எம்.முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தனபால் வரவேற்று பேசினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஓசூர் மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமிரெட்டி, துணை செயலாளர் ரகுநாதன், பொது குழு உறுப்பினர் பழையூர் தூருவாசன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொறியாளர் அணி செயலாளர் ஸ்ரீதர், தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக கட்சி கொடி ஏற்றி வைத்தனர். தொடர்ந்து 600 பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மாதையன், துணை செயலாளர்கள் தினேஷ், ஜோதி, சீத்தாராமன், பொதுக்குழு உறுப்பினர் சேலத்தான் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் நாகராஜ் நன்றி கூறினார்.