ஓய்வுபெற்ற அலுவலர் சங்க முப்பெரும் விழா


ஓய்வுபெற்ற அலுவலர் சங்க முப்பெரும் விழா
x
தினத்தந்தி 18 Dec 2022 6:45 PM GMT (Updated: 18 Dec 2022 6:46 PM GMT)

செங்கோட்டையில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க முப்பெரும் விழா நடந்தது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை தஞ்சாவூர் பள்ளிவாசல் இப்தார் அரங்கில், செங்கோட்டை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் பேரவைக்கூட்டம், 30-வது ஆண்டுவிழா, ஓய்வூதியர் தினவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. கிளைத்தலைவர் ராமசுவாமி தலைமை தாங்கினார். அகமது வரவேற்று பேசினார். செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை மற்றும் நிர்வாக அறிக்கை, கடந்த ஓராண்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களை எடுத்து கூறி, பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றார். பொருளாளர் செண்பககுற்றாலம் வரவு-செலவு கணக்குகளை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கல்யாணி சிவகாமிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) வெள்ளத்துரை, தென்காசி "எக்ஸோனரா அமைப்பு மாவட்ட செயலாளர் சங்கர நாராயணன், முன்னாள் பேராசிரியரும், ரோட்டரி ஆளுனருமான ஷேக் சலீம், முன்னாள் உடற்பயிற்சி இயக்குனர் பெருமாள், தென்காசி மாவட்ட எக்ஸோனரா அமைப்பு துணைத்தலைவர் ராஜ்மோகன், தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நூலகர் ராமசாமி, செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் இணைச் செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் 100 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.



Next Story