பள்ளியில் முப்பெரும் விழா


பள்ளியில் முப்பெரும் விழா
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆய்க்குடி அமர்சேவா சங்க பள்ளிகளில் முப்பெரும் விழா நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

தென்காசி அருகே ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சிவ சரஸ்வதி வித்யாலயா பள்ளிகளின் ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா பாரதி அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு அமர்சேவா சங்க இயக்குனர் தினேஷ் கிருஷ்ணா தலைமை தாங்கினார். தென்காசி தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். சிவ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.பார்வதி வரவேற்று பேசினார். சிவ சரஸ்வதி வித்யாலயா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.அழகுபூரணம் ஆண்டறிக்கை வாசித்தார். பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். மேலும் பள்ளிகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

அமர்சேவா சங்க நிறுவனர் பத்மஸ்ரீ விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன், அமர்சேவா சங்கம் சிவசரஸ்வதி வித்யாலயா பள்ளிகள் செயலாளர் எஸ்.சங்கரராமன், அமர்சேவா சங்க துணைத்தலைவர் டாக்டர் கே.முருகையா, சிவசரஸ்வதி வித்யாலயா பள்ளிகள் தாளாளர் எஸ்.பட்டம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எஸ்.ஆர்.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் சிவ சரஸ்வதி வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா நன்றி கூறினார்.


Next Story