முப்பெரும் யாகங்கள்
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
வாலாஜாப்பேட்டையை அடுத்த அனந்தலை கிராமத்தில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை கிருஷ்ணர் யாகம், அஷ்ட பைரவர் யாகம், மங்கள சண்டி யாகம் ஆகிய முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது. பல்வேறு மூலிகை திரவியங்கள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன், காரம், இனிப்பு பலகாரங்கள், அஷ்ட திரவியங்களை கொண்டு வேத விற்பனர்கள் யாகம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணர், அஷ்டகால சொர்ண பைரவர், 9 அடி உயரமுள்ள மகிஷாசுரமர்த்தினி ஆகியோருக்கு பால், தயிர், மஞ்சள், தேன், இளநீர், கரும்பு சாறு உள்ளிட்ட 9 விதமான அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு ஞானகுரு டாக்டர் முரளிதர சுவாமிகள் ஆசி வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
Related Tags :
Next Story