தனியார் நிறுவன ஊழியரை கொன்று கண்மாயில் வீசிய போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது


முகநூலில் பழகி பறித்த பணத்தை திரும்ப கேட்டதால் ஊழியரை கொன்று கண்மாயில் வீசிய போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்தனர். ேமலும் 2 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

முகநூலில் பழகி பறித்த பணத்தை திரும்ப கேட்டதால் ஊழியரை கொன்று கண்மாயில் வீசிய போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்தனர். ேமலும் 2 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் வளாகத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் மாரிமுத்து(வயது 27). டிப்ளமோ படித்து முடித்த இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் மாயமான இவர் கண்மாயில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் 2-வது நிலை போலீஸ்காரராக பணியாற்றும் வில்வதுரைக்கும்(32), மாரிமுத்துவிற்கும் இடையே முன்விரோதம் இருந்ததும், வில்வதுரை உள்பட சிலர் மாரிமுத்துவை கொலை செய்து கண்மாயில் வீசி இருப்பதும் தெரியவந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மணிமுத்தாறு போலீஸ் நிலையத்தில் விசாரித்தபோது வில்வதுரை தற்போது அங்கு‌ இல்லை என்ற தகவல் கிடைத்தது. இதற்கிடையே அவரது செல்போன் டவர் சிக்னலை வைத்து ஆராய்ந்தபோது அவர் நெல்லையில் இருப்பது தெரியவந்தது. அதன் பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் நெல்லைக்கு விரைந்தனர்.

முகநூல் பழக்கம்

அங்கு பதுங்கி இருந்த வில்வதுரையை பிடித்தனர். விசாரணையில் அவருடன் இருந்த இசக்கிராஜா(32), ரவிகுமார்(29) ஆகியோரும் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

மாரிமுத்துவுக்கு முகநூல் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த ராகினி என்ற பெண் அறிமுகம் ஆனார். அந்த பெண் தான் வசதியானவர் என்றும், மாரிமுத்துவை மிகவும் பிடித்துள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து மாரிமுத்து, ராகினியும் அடிக்கடி பேசி நெருங்கிய நட்புறவை ஏற்படுத்திக் கொண்டனர்.

பின்னர் ராகினி தனக்கு ரூ.5 லட்சம் அவசரமாக தேவைப்படுவதாக கூறி மாரிமுத்துவிடம் தனது வங்கி கணக்கு மூலம் பணம் பெற்றார். கடன் பெற்ற பின் ராகினி, மாரிமுத்துவின் தொடர்பை துண்டித்து விட்டார். அதோடு மட்டுமின்றி மாரிமுத்துவின் உறவினரான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியன் 2-வது நிலை போலீஸ்காரராக பணியாற்றும் வில்வதுரை என்பவரையும் ராகினி தனது காதல் வலையில் சிக்க செய்தார்.

ஏமாற்றி பணம் பறிப்பு

மேலும் வில்வதுரையின் உறவினர்கள் இசக்கி ராஜா, அவரது மனைவி இளவரசி, ரவிக்குமார் ஆகியோரும் ராகினியுடன் பேசி வந்தனர். இதில் வில்வதுரை, ராகினிக்கு ரூ.15 லட்சம் வரை கொடுத்துள்ளார். பின்னர் ‌வில்வதுரை மூலம் ஒரு குழுவாக செயல்பட்டு, பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை ராகினி பறித்ததாக கூறப்படுகிறது.

இப்படி ரூ.50 லட்சத்திற்கும் மேல் ராகினி பணத்தை பறித்ததாக தெரிகிறது. பணத்தை பறிகொடுத்த மாரிமுத்து, வில்வதுரையிடமும், ராகினியிடமும் தொடர்பு கொண்டு அடிக்கடி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகினி வில்வதுரையிடம், மாரிமுத்துவை தீர்த்துக்கட்டும்படி கூறினார்.

கழுத்ைத நெரித்து கொலை

இதையடுத்து வில்வதுரை, ராகினியிடம் பணம் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி கடந்த 28-ந் தேதி வில்வதுரை தனது நண்பர்களுடன் சேர்ந்து மாரிமுத்துவை காரில் அழைத்து சென்றார். ஆனால் அவரை கடத்தி சென்ற அவர்கள், சங்கரன்கோவில் அருகே ஒரு கண்மாய் பகுதியில் வைத்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் சாக்கு பையில் மாரிமுத்துவின் உடலை போட்டு கட்டி ராஜபாளையம் அருகே தளவாய்புரம்-புனல்வேலி செல்லும் சாலையில் உள்ள ரெட்டை கண்மாய் பகுதியில் வீசியதும் விசாரணையில் தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து வில்வதுரை, இசக்கி ராஜா, ரவிக்குமார் ஆகிய 3 ேபரையும் போலீசார் கைது செய்தனர்.

இ்ந்த சம்பவத்தில் தொடர்புடைய ராகினி மற்றும் இசக்கி ராஜாவின் மனைவி இளவரசி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story