மூதாட்டியின் கண்ணில் மிளகாய்பொடி தூவி நகை பறிப்பு


மூதாட்டியின் கண்ணில் மிளகாய்பொடி தூவி நகை பறிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2023 12:15 AM IST (Updated: 28 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே மூதாட்டியின் கண்ணில் மிளகாய்பொடி தூவி நகை பறிக்கப்பட்டது.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள பஞ்சமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி இந்திரா (வயது 65). இவர் நேற்று மாலை அதே பகுதியில் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், திடீரென தான் வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து இந்திராவின் கண்ணில் தூவிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தார். இதில் கண் எரிச்சலடைந்த இந்திரா, தன்னுடைய தாலிச்சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டபடி திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த சிறுவன், இந்திராவின் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டான். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இதுகுறித்து இந்திரா, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story