அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
கருங்கல் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்:
கருங்கல் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு பஸ்
உதயமார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று காலையில் ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை தேவிகோடு பகுதிைய சேர்ந்த ஜஸ்டின் டேவிட்சன் என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
அந்த பஸ் கருங்கல் அருகே பாலூர் சந்திப்பு பகுதியில் வந்த போது ஒரு வாலிபர் திடீரென பஸ் மீது கல் வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. இதைப்பார்த்த பயணிகள் அலறினர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து அந்த பகுதியை ேசர்ந்த பொதுமக்கள் பஸ் மீது கல் வீசிய வாலிபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
போலீசார் விசாரணை
இதுகுறித்து டிரைவர் ஜஸ்டின் டேவிட்சன் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பஸ் மீது கல் வீசியவர் தேவிகோடு தோரணவிளையை சேர்ந்த 35 வயதுடைய வாலிபர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.