கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கல்லிடைக்குறிச்சி அருகே கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருநெல்வேலி
கல்லிடைக்குறிச்சி பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட சிவலார்குளம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் வெள்ளைத்துரை (வயது 45) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் அடிதடி, கொலை முயற்சி மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் கார்த்திக்கேயன் ஏற்று வெள்ளத்துரையை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தார்.
Related Tags :
Next Story