வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை தாழையூத்து போலீசார் ராஜவல்லிபுரம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பொன்னுமணி (வயது 25) என்பவரை கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஏற்று, பொன்னுமணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் பொன்னுமணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை தாழையூத்து போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.


Next Story