வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாங்குநேரி அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருநெல்வேலி
நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 39). இவர் மீது நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று ராமரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் சாந்தி பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினார்.
Related Tags :
Next Story