டிபன் கடை உரிமையாளர் திடீர் சாவு
டிபன் கடை உரிமையாளர் திடீரென இறந்தார்.
திருச்சி தென்னூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 42). இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. இவர் பீமநகர் பகுதியில் டிபன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடைக்கு சென்ற அவர் கடை அருகே மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire