குமாரபாளையம் நகராட்சியில் 1,387 பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி


குமாரபாளையம் நகராட்சியில் 1,387 பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

குமாரபாளையம்:

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நகராட்சிக்குட்பட்ட 7 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது 7 நகராட்சி பள்ளிகளில் படிக்கும் 1,387 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்காக குமாரபாளையம் புத்தர் தெருவில் நகராட்சி பள்ளியில் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் கட்டப்பட உள்ளது.

இந்த தகவல் குமாரபாளையம் நகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story