சர்வதேச புலிகள் தினவிழா
சர்வதேச புலிகள் தினவிழா நடைபெற்றது
காளையார்கோவில்,
காளையார்கோவில் வசந்தம் நகரில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துளிர் இல்ல தொடக்க விழா மற்றும் சர்வதேச புலிகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க துணைத் தலைவருமான சேவற்கொடியோன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர்துரை மற்றும் துளிர் இல்ல வழிகாட்டி ஆசிரியை ரூபினா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பேராசிரியர் சூசைஆரோக்கிய மலர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி சிறப்புரையாற்றினார். விழாவில் டாக்டர் அப்துல் கலாம் துளிர் இல்லத்தின் தலைவராக கவுசிகாவும், துணைத்தலைவராக அபியும், செயலாளராக அருள்யூஜின் எப்சிபாவும், இணைச் செயலாளராக நிரஞ்சனாவும், பொருளாளராக தர்ஷனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக கிளைச் செயலாளர் சாலமன் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அருள்டேவிட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கதை சொல்லுதல் மற்றும் அறிவியல் வினாக்கள் கேட்கப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. முடிவில் பேராசிரியை சர்மிளா நன்றி கூறினார்.