டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை - போலீஸ் விசாரணை
10-வது மாடியில் இருந்து குதித்து டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
டிக்டாக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்களைப் போல் நடனமாடி பிரபலமானவர் ரமேஷ். சமூக வலைதளங்களில் 'டான்ஸர் ரமேஷ்' என்று அழைக்கப்படும் இவர் சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் நடனம் ஆடியிருந்தார்.
இந்நிலையில் கே.பி. பார்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து குதித்து டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் அவரது பிறந்தநாள் என்று கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசின் பிரிட்ஜ் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story