நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்
மாணவர்கள் இலக்கை அடைய நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என புத்தாக்க துணைத்தலைவர் தெரிவித்தார்.
கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் மோகன முருகன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் லோகேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது மாணவர்கள் வாழ்க்கையில் விரும்பிய இலக்கை அடைய தங்கள் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். வாழ்க்கையில் உயர்வதற்கு நூலகங்களை தேடிச்செல்ல வேண்டும் என்று கூறினார். பேராசிரியர் சரவணன் பேசுகையில் மாணவர்கள் ஒழுக்கத்தையும், நேரத்தையும் ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை கல்லூரி முதல்வர் தாணுநாதன், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.