திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

வாங்கூரில் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

ராணிப்பேட்டை

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னப்பந்தாங்கல் கிராமத்தை அடுத்த வாங்கூரில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 18 நாட்களாக மகாபாரத சொற்பொழிவும் இரவில் கட்டை கூத்து நாடகமும் நடந்து வந்தது.

நிகழ்ச்சியின் இறுதி நாளன்று காலை துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும் நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள், பொதுமக்கள் திரவுபதியம்மனை தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story