சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி


சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தான், சிவனின் 3 கண்களில் இருந்து பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய பெயர்களில் மூன்று குளங்கள் உள்ளன. முக்குளங்களில் நீராடி சாமியை வழிபட்டால் புத்திரப்பேறு நிச்சயம் என புராணங்களில் கூறப்படுகிறது. மிகவும் சிறப்பு பெற்ற 3 குளங்களில் நேற்று ஆடி அமாவாசை மற்றும் மாதப்பிறப்பை ஒட்டி தீர்த்த வாரி நடந்தது. முன்னதாக அசுர தேவர் மேளம், தாளம் முழங்கிட மூன்று குளங்களுக்கு கொண்டுவரப்பட்டார். பின்னர் பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தீர்த்தவாரி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் புனித நீராடினர்.


Next Story