சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி


சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:46 PM GMT)

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் சந்திர, சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நேற்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி 3 குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. 3 குளங்களில் எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குளங்களில் புனித நீராடி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் பேஸ்கர் திருஞானம், மேலாளர் சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story