திருச்செந்தூர் அமலிநகர், ஆலந்தலை கடலில்சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி


திருச்செந்தூர் அமலிநகர், ஆலந்தலை கடலில்சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அமலிநகர், ஆலந்தலை கடலில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு திருச்செந்தூர் ஆலந்தலை, அமலிநகர் கடலில் ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஆலந்தலை

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு திருச்செந்தூர் அருகே ஆலந்தலை புனிதர்கள் பேதுரு பவுல் தேவாலயத்தில் 18-ம் ஆண்டு நினைவாக பங்குதந்தை ஜெயக்குமார் தலைமையில் திருப்பலி நடந்தது. பின்னர், ஆலயத்திலிருந்து உதவி பங்கு தந்தை பாலன், திருத்தொண்டர்கள் பாக்யபவுல், சதீஷ், ஊர் தலைவர் ரமேஷ், ரொசாரி மாதா சபை தலைவர் ஜேம்ஸ், நிதிக்குழு செயலாளர் லிபேரியாஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரைக்கு சென்றனர். அங்கு பங்குதந்தை ஜெபம் செய்தார்.

பின்னர், இறந்தோரின் நினைவாக அனைவரும் கடலில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

இதேபோன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் திருச்செந்தூர் அமலிநகர் கடலில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், மீனவர் மேம்பாட்டு பேராயத்தின் மாவட்ட அமைப்பாளர் டிலைட்டா, விடுதலை கலை இலக்கிய பேரவையின் மாவட்ட அமைப்பாளர் சிவா, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் திருச்செந்தூர் நகர துணை அமைப்பாளர் ராம், சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story