திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரெயில் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் பகுதியாக ரத்து
திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரெயில் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
கோவில்பட்டி-நள்ளி ரெயில் நிலையங்கள் இடையே தற்போது உள்ள லெவல் கிராசிங் அகற்றப்பட்டு, அந்த பகுதியில் புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) இயக்கப்படும் திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரெயில் (16732) மற்றும் பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரெயில் (16731) ஆகியவை விருதுநகர் - திருச்செந்தூர் ரெயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதே போன்று இன்றும், நாளையும் இயக்கப்படும் திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில் (22628) திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கு 40 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story