திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் 4 நாட்களுக்கு கோவில்பட்டியுடன் நிறுத்தம்


திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் 4 நாட்களுக்கு கோவில்பட்டியுடன் நிறுத்தம்
x

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் 4 நாட்களுக்கு கோவில்பட்டியுடன் நிறுத்தப்படுகிறது.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட திண்டுக்கல், திருமங்கலம், விருதுநகர், மானாமதுரை, ராமேசுவரம், தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் மின் வழிப்பாதை பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பாலக்காட்டில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் வரை இயக்கப்படும் ரெயில் (வ.எண்.16731) நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை), 19-ந் தேதி, 21-ந் தேதி மற்றும் 22-ந் தேதிகளில் கோவில்பட்டி ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில், திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு புறப்படும் ரெயில்(வ.எண்.16732) மேற்கண்ட நாட்களில் திருச்செந்தூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு பாலக்காடு புறப்பட்டு செல்லும்.


Next Story