திருச்செந்தூர்டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


திருச்செந்தூர்டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பாடப்பிரிவுகள்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி கடந்த 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் பயிலும் இந்த கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின் 'பி-பிளஸ்' சான்று பெற்ற நிறுவனம் ஆகும்.

இளங்கலை கல்வியியல் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், பொருளியல், உயிர் அறிவியல், பொருளறிவியல், வணிகவியல், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகள் கற்று தரப்படுகின்றன. பி.இ. பட்டப்படிப்பு படித்தவர்கள் பி.எட். வகுப்பில் கணிதம், கணினி அறிவியல், பொருளறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

சிறப்பு அம்சங்கள்

பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இங்கு திறமைவாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல், உளவியல், கல்விநுட்பவியல், கணினி ஆய்வகங்கள் உள்ளன. மேலும் வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படுகிறது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு வளாகத்தேர்வு மூலம் தமிழ்நாட்டில் சிறந்த பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) வழிகாட்டல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கண்ட பாடப்பிரிவுகளில் குறைவான இடங்களே உள்ளன. எனவே பி.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.drsacedn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வரை 04639-242181, 220577, 9486381123, 9042282412 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story