திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


திருச்செந்தூர்  டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பாடப்பிரிவுகள்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி கடந்த 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் பயிலும் இந்த கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின் 'பி-பிளஸ்' சான்று பெற்ற நிறுவனம் ஆகும்.

இளங்கலை கல்வியியலில் (பி.எட்.) ஆங்கிலம், கணிதம், பொருளியல், உயிர் அறிவியல் (தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், செடி உயிரியல், உயிர் தொழில்நுட்பம்), பொருளறிவியல் (இயற்பியல், வேதியியல், பயன்பாட்டு இயற்பியல், உயிர் இயற்பியல், பயன்பாட்டு வேதியியல்), கணினி அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகள் கற்று தரப்படுகின்றன.

பொறியியல் கல்லூரிகளில் பி.இ. பட்டப்படிப்பு படித்தவர்களும் பி.எட். வகுப்பில் கணிதம், கணினி அறிவியல், பொருளறிவியல் பிரிவில் சேர்த்து கொள்ளப்படுவர்.

திறமைவாய்ந்த பேராசிரியர் குழு

பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இங்கு திறமைவாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல், உளவியல், கல்வி நுட்பவியல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்துடன் கூடிய நுண்ணியல் ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படுகிறது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு வளாகத்தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர் தேர்வுக்கான (டெட்) பயிற்சியும், ஆராய்ச்சி கல்விக்கான (நெட்) தேர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை

பி.எட். பட்டப்படிப்பில் கணிதம், உயிர் அறிவியல், பொருளியல், கணினி அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.

பி.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.drsacedn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வரை 04639-242181, 220577, 9486381123 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story