திருச்செந்தூர் எடிசன் ஆஸ்பத்திரியில் புதிதாக இருதய சிகிச்சை மையம்
திருச்செந்தூர் எடிசன் ஆஸ்பத்திரியில் புதிதாக இருதய சிகிச்சை மையத்தை கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் எடிசன் ஆஸ்பத்திரியில் புதிதாக இருதய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் டாக்டர் ஜெப் ரெட்லீன் தலைமையில் இசிஜி, எக்கோ, ட்ரெட் மில் சோதனை, ஹோல்டர் மானிட்டர், இருதய வடிகுழாய் ஆய்வு (ஆன்ஜியோகிராம்) ஆன்ஜியோப்ளாஸ்டி, தீவிர இருதய சிகிச்சை, இருதய உள்நோயாளி பிரிவு ஆகிய அதி நவீன வசதிகளுடன் இயங்கவுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி இருதய சிகிச்சை மையத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். அப்போது, திருச்செந்தூர் பகுதியில் இத்தகைய இருதய சிகிச்சை வசதிகள் அத்யாவசிய தேவையாகும். மக்களின் உயிர்காக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பேசினார்.
இந்த மையம், வருகிற மே 27-ந் தேதி முதல் செயல்பட உள்ளது. விழாவில், டாக்டர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை எடிசன் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் நித்யா ராகேஷ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.