வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

சூளாங்குறிச்சியில் வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு 9-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று விழா மேடையில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி ஜே.எஸ். குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி நிறுவனர் டாக்டர் செந்தில்குமார் செய்திருந்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story






