எசனை வேணுகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


எசனை வேணுகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
x

எசனை வேணுகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த எசனையில் உள்ள செங்கமல வல்லித்தாயார் சமேத வேணுகோபால சுவாமி கோவில் திருவிழா 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் இரவில் அன்னம், சிம்மம், அனுமந்த, சந்திரன், கருடன், யானை, நாகபாஷம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடும், சக்கரத்தாழ்வார் திருவீதி உலாவும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடந்தது. இதில் எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை மற்றும் அனுக்கூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இரவில் பூப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story