திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா


திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா விழுப்புரம் மாவட்ட நூலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) காசீம் தலைமை தாங்கினார். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க செயலாளர் விக்கிரமன் வரவேற்றார். சமூகநீதி பாதுகாப்பு இயக்க நிறுவனர் சாமிக்கண்ணு, கவிச்சிங்கம் அர்த்தநாரிச வர்மா பண்பாட்டு பேரவை தலைவர் சஞ்சீவிராயன், திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளை ஞானஜோதி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் உலக திருக்குறள் முற்றோதல் இயக்க மாவட்ட பொறுப்பாளர் துரை.ராசமாணிக்கம் கலந்துகொண்டு, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என 22 பள்ளிகளை சேர்ந்த 1,200 மாணவர்களுக்காக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திருக்குறள் நூல்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

திண்டிவனம் தமிழ்சங்க நெறியாளர் ஏழுமலை, திருக்குறள் தொண்டு நிறுவன பலராமன், பாடல் வளாக நிறுவனர் தமிழநம்பி, தமிழ்சங்க ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் ஜானகிராமன், உலக திருக்குறள் கூட்டமைப்பு பொருளாளர் ஜீவேந்திரதாசன், உலகத்தமிழ் கவிஞர் பேரவை விஜயநந்தினி, தமிழ்சங்க துணைத்தலைவர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழுப்புரம் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற செயலாளர் மாதவகிருஷ்ணன் நிரலுரையாற்றினார். முடிவில் மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.


Next Story