செல்வி அம்மன் கோவிலில் திருமாலை பூஜை
நெல்லை சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவிலில் திருமாலை பூஜை நடந்தது.
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை விஸ்வநாத செல்வி அம்மன் கோவிலில் வருசாபிஷேக விழா கடந்த 25-ந்தேதி நடந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று திருமாலை பூஜை விழா தொடங்கியது. மாலையில் அம்பாளுக்கு சிறப்பு மாக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் வில்லிசை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சக்திஹோம பூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலம், 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆசாரக்கும்பம் எடுத்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது பக்தர்கள் தங்களது வீடுகளின் முன்பு அம்மனை வரவேற்று பொங்கலிடுவார்கள். இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு ஆசார படப்பு தீபாரதனை நடைபெறுகிறது.