திருமயத்தில் தூய்மை சேவை பணி


திருமயத்தில் தூய்மை சேவை பணி
x

திருமயத்தில் தூய்மை சேவை பணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையே சேவை எனும் மாபெரும் தூய்மை சேவை பணி மேற்கொள்ள அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று திருமயம் தாலுகா அலுவலகத்திலும், திருமயம் பஸ் நிலையத்திலும் தூய்மையே சேவை பணி நடைபெற்றது. இதில் கலெக்டர் மெர்சி ரம்யா கலந்து கொண்டு தூய்மை சேவை பணியை தொடங்கி வைத்து உறுதிமொழி வாசித்தார். ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் குப்பை அதிகமாக சேரும் பகுதியில் கண்டறியப்பட்டு பொதுமக்கள் பங்களிப்போடு தூய்மை பணியாளர்கள், சுய உதவிக்குழுக்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் இந்த தூய்மை பணியில் ஈடுபடுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார். உறுதி மொழியை அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் அனைவரும் எடுத்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் மெர்சி ரம்யா திருமயம் பஸ் நிலையத்தை பார்வையிட்டு மேலும் தூய்மையாக வைத்துக் கொள்ள கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதபிரியா, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஒன்றியக்குழு தலைவர் ராமு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நளினி, சங்கர், தாசில்தார் புவியரசன் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர், சுய உதவிக் குழுவினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story