ராஜகாளியம்மன் கோவிலில் திருநடன ஊஞ்சல் உற்சவம்


ராஜகாளியம்மன் கோவிலில் திருநடன ஊஞ்சல் உற்சவம்
x

குத்தாலம் ராஜகாளியம்மன் கோவிலில் திருநடன ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் திருநடன ஊஞ்சல் உற்சவ திருவிழா கடந்த 13-ந் தேதி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் கச்சி விநாயகர் கோவிலில் இருந்து ராஜகாளியம்மன் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து ராஜகாளியம்மன் கோவிலில் பந்தல் காட்சி அளித்தல் மற்றும் ஊஞ்சல் உற்சவ திருவிழா நடந்தது. அப்போது பக்தர்கள் ராஜகாளியம்மனுக்கு சீர்வரிசை வைத்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழா. ஏற்பாடுகளை சின்ன செங்குந்தர் தெரு, பெரிய செங்குந்தர் தெரு வாசிகள், ராஜகாளியம்மன் நற்பணி நல சங்கத்தினர் செய்திருந்தனர்.


Next Story